நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அவசர பொதுத் தேர்தலை நடத்த தயார்!
#SriLanka
#Election
#Parliament
#Election Commission
Mayoorikka
2 years ago
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனையின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தை நியமிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த வருடம் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் டிசம்பர் 31ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்பதே இதற்கான காரணம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலத்தவர்களிடையே கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.