உக்ரைனில் அஞ்சல் விநியோக மையத்தின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்

#Attack #Russia #Missile #Ukraine #War #Office
Prasu
2 years ago
உக்ரைனில் அஞ்சல் விநியோக மையத்தின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்

போரினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு உக்ரைன் நகரமான Kharkiv வில் உள்ள அஞ்சல் விநியோக மையத்தின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலால் ஆறு பேர் உயிரிழந்துள்ளதோடு குறைந்தது 14 பேர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக Kharkiv பிராந்தியத்தின் ஆளுநர் Oleh Synehubov தெரிவித்தார்.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தபால் நிலைய ஊழியர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

 தாக்குதலுக்கு சில வினாடிகளுக்கு முன்பு சைரன்கள் கேட்டதாகவும், தபால் நிலைய ஊழியர்களுக்கு பாதுகாப்பான இடத்திற்கு ஓடுவதற்கு நேரம் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!