ஹமாஸ் - இஸ்ரேல் மோதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணிற்கு DNA பரிசோதனை!
#SriLanka
#Israel
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இஸ்ரேலில் இடம்பெற்ற மோதல்களின் போது உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் சடலத்தை அடையாளம் காண DNA பரிசோதனையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
அதற்காக தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் அவரது சகோதரியின் DNA மாதிரிகள் பரிசோதிக்கப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ள அவர், அவர்களின் DNA மாதிரிகளை இஸ்ரேலுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஹமாஸ் போராளிகளின் தாக்குதலில் திருமதி அனுலா ரத்நாயக்க கொல்லப்பட்டது அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.