நீதிபதிக்கான நீதி கோரி நாடுதழுவிய போராட்டம்

#SriLanka #Protest #Kilinochchi #Tamilnews #srilankan politics #Judge #sritharan
PriyaRam
9 months ago
நீதிபதிக்கான நீதி கோரி நாடுதழுவிய போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அவர்கள் தனது பதவியில் நேர்மையாக செயற்பட்டதற்காக இனம் தெரியாத நபர்களினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு அடி பணியாது தனது பதவியை துச்சமென நினைத்து பதவி துறந்து நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இதனால் அவருக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளை நாடு தழுவிய போராட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது. 

நாட்டின் சரித்திரத்தில் முதன்முதலில் நீதிபதி ஒருவர் பதவி விலகியுள்ளார்! எம்.ஏ.சுமந்திரன்

இந்த போராட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை காலை.9.30 மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கண்டனப் போராட்டத்தில் அனைத்து மக்களினையும் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. 

தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலையில் இருக்கக் கூடாது -  செல்வம் அடைக்கலநாதன்

அனைத்து மக்களிற்குமான அழைப்பு 

"ஈழத்தமிழர்களின் மரபுவழித் தாயகப் பகுதியான குருந்தூர்மலையின் இருப்பையும், அங்கு தமிழர்கள் வழிபாடியற்றும் உரித்தையும் நிலைநிறுத்தியதற்காகவும், 
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை நடாத்துவதற்கு அனுமதித்ததற்காகவும் சிங்கள பேரினவாதத்தால் பழிவாங்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு ஏற்பட்ட இந்நிலை, 
தமிழினம் சார்ந்து சிந்திக்கின்ற, இனத்தின் இருப்பை நிலைநிறுத்த நியாயத்தின் பாற்பட்டு கடமையாற்றுகின்ற இன்னுமோர் தமிழ் நீதிபதிக்கு ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்த வேண்டிய கடமை எம் ஒவ்வொருவருவருக்கும் உள்ளது. 
நீதியின் செங்கோலை, அதிகாரத் தரப்புகளுக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கும் சாதகமாக வளைக்க மறுத்ததற்காக ஒரு தமிழ் நீதிபதிக்கு இந்த நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றால், 
இந்த நாட்டின் சிறுபான்மை இனமாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஈழத்தமிழினத்தின் இருப்பு எவ்வளவு தூரம் சவாலுக்கு உட்படுத்தப்படும் என்பது பற்றி சர்வதேச சமூகத்தின் கவனத்தைக் கோரும் வகையில் இக்கண்டனப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் இணைந்துகொள்ளுமாறு அழைத்து நிற்கின்றோம். இனத்தின் இருப்புக்காகப் பதவி துறந்திருக்கும் நீதிபதிக்காக சர்வதேசத்தின் நீதியைக் கோரத் தவறுவது, எங்கள் இனத்தின் இருப்பை இன்னும் வலுவிழக்கச் செய்யும் என்பதை உணர்வோம், இணைவோம்

 என குறிப்பிடப்பட்டுள்ளது.

images/content-image/2023/09/1695994829.png