தாய்லாந்தில் பீர் பாட்டில்களால் கட்டப்பட்ட புத்தர் கோவில்

#Temple #Buddha #Thailand #Bottles #beer
Prasu
10 months ago
தாய்லாந்தில் பீர் பாட்டில்களால் கட்டப்பட்ட புத்தர் கோவில்

தாய்லாந்தில் பல லட்சம் பீர் பாட்டில்களை கொண்டு புத்தர் கோவில் ஒன்று கட்டப்பட்டு இருப்பது அனைவரும் ஆச்சரியத்தை வழங்கியுள்ளது. தாய்லாந்தின் சிகாகெட் மாகாணத்தில் குன் ஹான் மாவட்டத்தில் இந்த புத்தர் கோவில் அமைந்துள்ளது. 

வாட் பா மஹா செடி கேவ் என்று அழைக்கப்படும் இக் கோவில் கிரேட் கிளாஸ் பகோடாவின் வனப்பகுதி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் தனிச்சிறப்பு என்னவென்றால் இந்த கோவில் வளாகம் முழுவதும் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பீர் பாட்டில்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

கோவில் கட்டிடம் சிமெண்ட் கலவைகளால் கட்டப்பட்டது என்றாலும், இந்த பீர் பாட்டில்கள் அதன் மேல் புறத்தில் அழகு படுத்தும் விதமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் வழிபாட்டு தலமாக மட்டும் இல்லாமல், மறுசுழற்சி, நிலைத்தன்மை மற்றும் மனித படைப்பாற்றலுக்கு சிறந்த கருது கோளாக விளங்குகிறது.

இந்த கோவிலின் படிகட்டுகளில் மட்டும் இல்லாமல் தூண்கள், பொது குளியலறைகள், பூஜை அறைகள், தண்ணீர் டேங்க் மற்றும் சுடுகாடு கூட பீர் பாட்டில்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1984ம் ஆண்டு புத்த பிக்ஷு ஒருவர் பீர் பாட்டில்களை சேகரிக்க தொடங்கியுள்ளார். 

அவர் சேகரித்து பீர் பாட்டில்களை கொண்டு முதலில் கோவிலின் முதன்மை கட்டிடத்தின் வடிவமைப்பு தொடங்கியுள்ளது.அதனை தொடர்ந்து கோவிலின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அதற்கு கண்ணாடி பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டன.