உறக்க நிலையில் ரோவர்.. 14 நாட்கள் கழித்து மீண்டும் இயங்கவிட்டால் என்னவாகும்.. இஸ்ரோ தகவல்

#India #Lanka4 #technology
Kanimoli
7 months ago
உறக்க நிலையில் ரோவர்.. 14 நாட்கள் கழித்து மீண்டும் இயங்கவிட்டால் என்னவாகும்.. இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் 3 யில் உள்ள ரோவர், லேண்டர் உள்ளிட்ட கருவிகள் அனைத்தும் தூக்க நிலைக்கு சென்றுவிட்ட நிலையில் 14 நாட்கள் கழித்து அவற்றை இயக்குவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. 

அன்றைய தினம் லேண்டரின் சாய் தளத்திலிருந்து 6 சக்கரங்களை கொண்ட ரோவர் தரையிறங்கியது. இந்த இடத்திற்கு சிவசக்தி என பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில் நிலவில் 14 நாட்களுக்கு சூரிய ஒளி இருக்கும் என்பதால் ரோவர் சுற்றி சுற்றி போய் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்து அனுப்பியது. அதில் நிலவில் ஆக்ஸிஜன், மாங்கனீஸ், சிலிகான், இரும்பு, கால்சியம், சல்பர் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பதை கண்டறிந்தது. அது போல் நிலவில் இருந்த பள்ளங்களை தாண்டி ரோவர் வெற்றிக்கரமாக ஆய்வு நடத்தியது. இந்த நிலையில் நேற்றைய தினம் நிலவில் சூரிய ஒளிப்படும் 14 நாட்கள் முடிந்து நிலவு நாள் தொடங்கியது.

 அதனால் அந்த பகுதியில் அடுத்த 14நாட்களுக்கு சூரிய வெளிச்சம் இருக்காது. இதனால் ரோவர், லேண்டர் உள்ளிட்ட கருவிகள் இருளில் இருக்கும். எனினும் இந்த 14 நாட்கள் சூரிய வெளிச்சத்தில் ரோவர், லேண்டர் உள்ளிட்ட கருவிகள் ஆற்றலை பெற்று அடுத்த 14 நாட்கள் பணியாற்றும் வாய்ப்பிருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. இதனால் அடுத்த 14 நாட்களுக்கு என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில் இதுகுறித்து இஸ்ரோ கூறுகையில் நிலவில் உள்ள பிரக்யான் ரோவர் தூக்க நிலைக்குச் சென்றுவிட்டது. எப்படியும் 14 நாட்கள் கழித்து ரோவரை மீண்டும் இயக்க வைப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. பூமிக்கு லேண்டர் வழியாக தகவல்களை பரிமாறிய கருவிகள் அனைத்து தூக்க நிலைக்கு சென்றுவிட்டது. 14 நாட்கள் கழித்து சூரிய ஒளியில் கிடைத்த ஆற்றலை வைத்துக் கொண்டு பிரக்யான் மீண்டும் செயலாற்றும். ஒரு வேளை செயலாற்றாமல் போனால் அது எப்போதும் அங்கேயே இருந்துவிடும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.