தமிழ்நாடு அரசு அதிரடி; கடும் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு!

#Tamil Nadu #Tamil Student #Minister #students #Tamilnews #School Student
Mani
2 years ago
தமிழ்நாடு அரசு அதிரடி; கடும் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு!

சென்னை

தமிழ்நாட்டில் வெயில் மோசமாகிக்கொண்டே இருக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. 6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ல் பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்பார்க்காத அளவிற்கு வெயில் உச்சம் அடைந்து உள்ளது. தினசரி வெப்பநிலை முதல்நாளை விட அதிகமாக உள்ளது. கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!