நிலுவையில் உள்ள அனைத்து பணத்தையும் செலுத்திய அரசாங்கம்: ஜனாதிபதியின் பிரதானி
அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் நிலுவையிலுள்ள அனைத்து பணமும் அரசாங்கத்தினால் செலுத்த முடிந்ததாக ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
3 வருடங்களாக அரசாங்க ஒப்பந்தகாரர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை அரசாங்கம் செலுத்தவில்லை எனவும் அவர்களால் அனைவருக்கும் பணம் செலுத்த முடிந்துள்ளதாகவும் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ரத்நாயக்க தெரிவித்தார்.
இராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்தவர்கள், நெடுஞ்சாலைகளை நிர்மாணித்த ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் கொடுத்து முடிக்க முடிந்தது.
ஓய்வு பெற்ற அரசு நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு பல ஆண்டுகளாக பணிக்கொடை வழங்கப்படாமல் இருந்தது அதற்கு தேவையான அனைத்து பணமும் அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வரை வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகள் அனைத்தும் தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி மாதத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பணம் மாத்திரமே வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.