வடக்கில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தொடர்பில் தகவல் வெளியிட்ட மாகாண பணிப்பாளர்

#SriLanka #NorthernProvince #Examination
Mayoorikka
2 years ago
வடக்கில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு  தோற்றும் மாணவர்கள் தொடர்பில் தகவல் வெளியிட்ட மாகாண பணிப்பாளர்

இன்று திங்கட்கிழமை ஆரம்பித்த கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்தில் இருந்து 23 ஆயிரத்து இருபத்தேழு பாடசாலைப் பரீட்சாத்திகளும் 6ஆயிரத்து 341 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் பரீட்சையில் தோற்றுவதற்குரிய விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரேஸ் தெரிவித்தார்.

 இன்று ஆரம்பமாகி உள்ள கல்விப் பொதுத் தராதர சாதன பரீட்சை தொடர்பான ஏற்பாடுகள் குறித்து அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

 வட மாகாணத்தில் குறித்த பரீட்சைக்காக 248 பரீட்சை நிலையங்களும் 6 பிராந்திய பரீட்சை சேகரிப்பு நிலையங்களும் 77 இணை நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 யாழ். மாவட்டத்தில் முதலாவது நிலையமான தீவகம் மற்றும் தென்மராட்சி வலையங்களில் 5ஆயிரத்து 272 பாடசாலை பரீட்சாத்திகளும்,1338 தனிப்பட்ட பரீட்சாத்திகளுமாக 6610 பேர் பரீட்சையில் தோற்றுகின்றனர்.

 யாழ். மாவட்டத்தில் இரண்டாவது நிலையமாக வடமராட்சி மற்றும் வலிகாம வலயங்களைச் சேர்ந்த 6310 பாடசாலை பரீட்ச்சாத்திகளும் 1743 தனிப்பட்ட பரீட்சாத்திகளுமாக 8053 பேர் பரீட்ச்சையில் தோற்றுகின்றனர்.

 கிளிநொச்சி மாவட்டத்தில் 341 பாடசாலைப் பரீட்ச்சாத்திகளும் 762 தனிப்பட்ட பரீட்சாத்திகளுமாக 3803 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2684 பாடசாலை பரீட்ச்சாத்திகளும் 469 தனிப்பட்ட பரீட்சாத்திகளுமாக 3153 பேரும், மன்னார் மாவட்டத்தில் 2247 பாடசாலை பரீட்சாத்திகளும் 995 தனிப்பட்ட பரீட்சாத்திகளுமாக 3242 பேரும் வவுனியா மாவட்டத்தில் 3473 பாடசாலை பரீட்ச்சாத்திகளும் 1007 தனிப்பட்ட பரீட்சாத்திகளுமாக 4480 பேர் இன்று ஆரம்பமாக உள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் தோற்றவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!