சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.
#Cinema
#Actor
#TamilCinema
#Award
Mani
1 year ago

அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விருது வழங்கும் விழாவை பாலிவுட் நடிகர்கள் விக்கி கௌஷல் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனுக்கு சர்வதேச ஐஐஎஃப்ஏவின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நடிகர் கமல்ஹாசனுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியத் திரையுலகில் பல ஆண்டுகளாக ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக இந்த விருதை வழங்கினார். பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் பிற குறிப்பிடத்தக்க நபர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.



