இரு அமைச்சரவை அமைச்சர் பதவிகளில் மாற்றம்?

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Minister #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
இரு அமைச்சரவை அமைச்சர் பதவிகளில் மாற்றம்?

இரண்டு அமைச்சரவை அமைச்சர் பதவிகளில் இன்னும் சில தினங்களில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில், இரண்டு அமைச்சுப் பதவிகளிலும் மிக விரைவில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 எவ்வாறாயினும், அந்தப் பதவிகளுக்கு யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்டர்கள் அமைச்சுப் பதவிகளுக்காக காத்திருப்பதாகவும், அவர்களுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த காலங்களில் பல தடவைகள் சிரேஷ்டர்களுக்கு அமைச்சுப் பதவிகளை கோரிய போதும் அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!