கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பம்!
#SriLanka
#Examination
Mayoorikka
2 years ago
2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில் 4, 72,553 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
பாடசாலை மூலம் 3,94,450 பேர் தோற்றவுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள 3,568 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பரீட்சைக்காக 40 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.