பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்த தேவேந்திரன் மதுசிகன்.
#India
#SriLanka
#Mannar
#Lanka4
#sports
#Sports News
Kanimoli
2 years ago
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்து கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பு மண்ணிற்கும், புனிய மிக்கேல் கல்லூரிக்கும் பெருமை சேர்த்தார் தேவேந்திரன் மதுசிகன்.
28 - 05 - 2023 இன்று இச் சாதனை நிகழ்த்தப்பட்டது. ஜனாதிபதி விருது பெற்ற சாரணன், புனித மிக்கேல் கல்லூரியின் மாணவன் தேவேந்திரன் மதுசிகனையும், அவரது முயற்சிக்கு உறுதுணையாய் நின்ற அவரது பெற்றோர், பாடசாலைச் சமூகம், நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் நாம் பாராட்டுகின்றோம்.
புனித மிக்கேல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-எம்.ரீ.எம்.பாரிஸ்
