பருத்தித்துறையில் 3ஆம் குறுக்குத் தெருவில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு
#SriLanka
#Jaffna
#Death
#Point-Pedro
#Hospital
#Lanka4
Kanimoli
2 years ago
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 3ஆம் குறுக்குத் தெருவில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து, இன்றையதினம் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தற்போது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் காணப்பட்ட இடத்திற்கு சென்ற பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதவான் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், சடலம் மீது நாளை உடற்கூற்று பரிசோதனைகள் இடம் பெறவுள்ளதாக பருத்தித்திறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரணமடைந்தவர் பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 33 வயதுடைய தியாகராசா சந்திரதாஸ் என்பவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.