க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள 6 மாணவர்கள் கைது
கேகாலை, அரநாயக்க, அசுபினி எல்ல நீர் திட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட நீர் குழாய்கள் தீப்பிடித்த சம்பவம் தொடர்பில் 6 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரநாயக்க பொலிஸாரின் விசேட விசாரணையின் பின்னர் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான நீர்த்திட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
அதற்கு இரண்டு நாட்களுக்கு முன், இந்த நீர் குழாய் தீப்பிடித்தது. தீவிபத்து நாசவேலை என தெரிவிக்கப்பட்டதையடுத்து அரநாயக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, நீர் குழாயில் தீ பரவிய சம்பவம் தொடர்பில் 06 பாடசாலை மாணவர்களிடம் அரநாயக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த 06 பாடசாலை மாணவர்களும் உள்ளுர் பாடசாலையொன்றில் கல்வி பயின்று வருவதாகவும், இவ்வருடம் கல்விப் பொதுச் சான்றிதழ் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் குழுவாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
விசாரணையில் மாணவிகளுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.