செந்தில் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலில் கரையோர பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் விஷேட வேலைத் திட்டம்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலில் மாகாணத்தின் கரையோர பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் விஷேட வேலைத் திட்டம் மாகாணத்தின் கரையோர நிர்வாக எல்லைகளை கொண்ட அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின்னூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. "தூய்மையான அழகிய ஈர்க்கும் கடலோரம்" எனும் ஆளுநரின் எண்ணக் கருவிற்கு அமைவாக இவ் வேலை திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கு அமைவாக மட்டக்களப்பு வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கடற்கரையோரங்கள் மற்றும் அதனை அண்டிய சுற்றுச் சூழல் பகுதிகளை துப்புரவு செய்யும் பணிகள் சபையின் செயலாளர் S.வீரசுதாகரன் தலைமையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதன் போது காயங்கேணி,மாங்கேணி, சல்லித்தீவு போன்ற பிரதான கடற்கரை பகுதிகளில் காணப்பட்ட சூழலுக்கு ஆபத்தான பிளாஸ்டிக் பொலித்தீன் போன்ற கழிவுகள் சபையின் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் சேகரிக்கப்பட்டு முறையாக அகற்றப்பட்டன.
மேலும் இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைத்து சுற்றுலா துறையினை மேம்படுத்துவதை நோக்காக கொண்டு தொடர்ந்தும் இவ்பணியினை தமது பிரதேச சபை முன்னெடுக்க உள்ளதாக சபையின் செயலாளர் குறிப்பிட்டார்.