மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில்
#SriLanka
#Student
#Lanka4
#education
#sri lanka tamil news
#Ranjith Siambalapitiya
Prathees
2 years ago
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தும் அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் வாய்ப்பில்லாத 5,000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் தொகை வழங்குவது தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த கடன் திட்டத்தின் கீழ், படிப்பிற்கு வட்டியில்லா கடன் தொகை ரூ.09 லட்சம் கிடைக்கும். நாளாந்த செலவுகளுக்காக 03 இலட்சம் ரூபா கடன் தொகை கிடைக்கும் என பதில் நிதியமைச்சர் தெரிவித்தார்.
அந்த மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்குவது பெற்றோருக்கும் பெரும் ஆறுதலாக உள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்தார்.