விமானத்தின் அவசர கால கதவு திறந்ததால் பயணிகளுக்கு மூச்சு திணறல்!
#Accident
#world_news
#Tamilnews
#Breakingnews
Mani
2 years ago
தென்கொரியாவில் ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் நேரத்தில், விமானத்தின் அவசர கால கதவை திறந்துவிட்ட பயணியை போலீசார் கைது செய்தனர்.
ஜேஜு தீவில் இருந்து 194 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், டேகு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, ஒரு பயணி திடீரென கதவை திறந்ததால் சக பயணிகள் அச்சமடைந்தனர்.
எனினும், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும் உயிர்தப்பினர். விமானம் தரையிறங்கியவுடன், கதவை திறந்த 30 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், விமானம் தரையிறங்கிய போது கதவு திறக்கப்பட்டதால் 9 பயணிகளுக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏசியானா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.