பாட்டியை கொலை செய்து சடலத்தை காட்டுக்குள் வீசிய 24 வயதுடைய பேரன்
#SriLanka
#Arrest
#Murder
Prasu
2 years ago
57 வயதுடைய தனது பாட்டியின் கழுத்தை கத்தியால் அறுத்து அவரது சடலத்தை காட்டுக்குள் வீசிய 24 வயதுடைய பேரனைக் கைது செய்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை மாவட்டத்தில் பொல்லுன்ன, பதுரலிய ஹடிகல்லவைச் சேர்ந்த லீலாவதி விக்கிரமசிங்க என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது பேத்தியார் சுகயீனமுற்றவர் என்பதாலும், அவரது சிகிச்சைக்காக பணம் செலவழிக்கப்பட்டதாலும் சந்தேகநபர் இந்த குற்றத்தை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த பெண் சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், கொலைசெய்யப்படுவதற்கு முன் வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.