கீர்த்தி சுரேஷின் சகோதரி ரேவதி சுரேஷ் தற்போது டைரக்டராகி உள்ளார்.
#India
#Cinema
#Actress
#Director
Mani
2 years ago
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், பிரபல நடிகை மேனகாவின் மகள் ஆவார். மேனகா ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீர்த்தி சுரேஷின் சகோதரியான ரேவதி சுரேஷ் இயக்குநராக மாறியுள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல இயக்குனரான பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.
'தேங்க் யூ' என்ற புதிய குறும்படத்தை இயக்கிய ரேவதி சுரேஷ், தற்போது படத்தை இயக்க வந்துள்ளார். படத்தின் போஸ்டரை கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் பகிர்ந்து இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
குறும்பட இயக்குனரான ரேவதி சுரேஷ் ஏற்கனவே ஒரு மலையாளப் படத்தை தயாரித்துவிட்டு, தற்போது இன்னொரு படத்தை விரைவில் இயக்க தயாராகி வருகிறார்.