யாழ்ப்பாணத்தில் மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் கைது
#SriLanka
#Jaffna
#Arrest
#Fisherman
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் சாளை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமான முறையில் மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேரை கடற்படையினர் 6 டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களுடன் கைப்பற்றியுள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளையின் சுண்டிக்குளம் மற்றும் சாலை கடற்படை பிரிவினர் யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் சாலை பகுதிகளுக்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அங்கு, அந்த கடற்பகுதியில் சட்டவிரோதமாக மின் விளக்குகளை பயன்படுத்திய ஆறு 6 பேருடன் ஆறு 6 டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.