புத்தளத்தில் ஆசிரியரை தாக்கிய மாணவர்களுக்கு பிணை
#SriLanka
#Arrest
#Police
#Court Order
#Lanka4
#students
#sri lanka tamil news
Prathees
2 years ago
பாடசாலையொன்றின் ஒழுக்காற்று ஆசிரியரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
4 பாடசாலை மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததோடு 17 மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணை நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஒவ்வொருவரும் தலா 5 இலட்சம் பெறுமதியான சரீரப் பிணையத்தை வழங்குமாறும், பொதுப் பரீட்சை முடிவடைந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புத்தளம் முஸ்லிம் பாடசாலை ஒன்றின் மீது கடந்த 23ஆம் திகதி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கு ஜூன் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.