கைது செய்வதைத் தடுக்குமாறு பாஸ்டர் ஜெரோம் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்

#SriLanka #Court Order #Lanka4 #sri lanka tamil news #Pastor
Prathees
2 years ago
கைது செய்வதைத் தடுக்குமாறு  பாஸ்டர் ஜெரோம் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்

தம்மைக் கைது செய்வதைத் தடுக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி ஜெரோம் பெர்னாண்டோ உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார். 

 மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், அதன் பணிப்பாளர் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தலைவர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

எதிர்மனுதாரர்கள் தம்மை சட்ட விரோதமாக கைது செய்ய தயாராகி வருவதாக மனுவில் தெரிவித்துள்ளார். 

அந்த மனுவில், தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

 பாஸ்டர் ஜெரோம் பெர்னாண்டோ இந்த நாட்டுக்கு வந்தவுடன் தம்மை கைது செய்வதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

 பௌத்தம் மற்றும் ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தி பாஸ்டர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!