ஜனாதிபதி நாடு திடும்பியதும் புதிய ஆளுநர்கள் நியமனம்!
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் புதிய ஆளுநர்கள் இருவரை நியமிக்கவுள்ளார் என்று அறியமுடிகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி நாளை சனிக்கிழமை நாடு திரும்புகின்றார்.
வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வட மேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோர் திங்கட்கிழமை (15) பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
அந்த வெற்றிடங்களுக்கு வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு
மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா
அபேவர்தன ஆகியோர் கடந்த 17ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தனர்.