ஜப்பான் நிதியமைச்சரை சந்தித்த ஜனாதிபதி ரணில்: கடன் மறுசீரமைப்பு தொடர்பாக கலந்துரையாடல்
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் நிதியமைச்சர் Shunichi Suzuki-ஐ சந்தித்துள்ளார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை சந்தித்துள்ளார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பொருளாதாரம், கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவர்கள் கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜப்பானின் டோக்கியோவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதிப் பிரதமர் லோரன்ஸ் வொன்ட் ஆகியோருக்கு இடையில் இருதரப்பு கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.