உள்நாட்டு மதுபானங்களின் விலையை குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - நிதியமைச்சு

#SriLanka #prices #Lanka4 #drink
Kanimoli
2 years ago
உள்நாட்டு மதுபானங்களின் விலையை குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - நிதியமைச்சு

கலால் வரி வருமானம் மார்ச் மாதத்தில் 40 வீதத்தால் குறைந்துள்ளதாகவும், ஆனால் உள்நாட்டு மதுபானங்களின் விலையை குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

 எதிர்வரும் ஜூன் மாதம் முதல் உள்நாட்டு மதுபானங்களின் விலை குறையும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளில் உண்மையில்லை என நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வருடம் ஜனவரியில் கலால் வரி உயர்த்தப்பட்டதால் இந்த ஆண்டுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கலால் வருவாய் 30 சதவீதம் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

 வழமையான உள்நாட்டு மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நுகர்வோர் சட்டவிரோத மதுபானங்களை நாடுவதாகவும் அதனால் அரசாங்கத்தின் வருமானம் குறைந்து மக்களின் சுகாதார நிலையும் மோசமடைவதாகவும் நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!