மாதத்திற்கு பன்றிகளுக்கு உணவாகும் 5000 கோழிக்குஞ்சுகள்
தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியம் மற்றும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு சொந்தமான கால்நடை பண்ணைகளில் கிட்டத்தட்ட 5,000 சேவல் கோழிக்குஞ்சுகளை பன்றிகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பல வருடங்களாக செய்து வருவதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், கோழிப்பண்ணைகளில் ஆண், பெண் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பல ஆண்டுகளாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேவல் கோழிக்குஞ்சுகளை சட்டவிரோதமாக அகற்றுவதை உடனடியாக நிறுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டின் கோழி இறைச்சி தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்த சேவல் கோழிக்குஞ்சுகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள பெருமளவிலான இளைஞர்கள் தற்போது வேலையில்லாமல் இருப்பதால், இறைச்சிக்காக கோழிப்பண்ணைக்கு இந்த விலங்குகளை வழங்க முடியும் என்றும், இதன் மூலம் வேலையற்ற இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
எனவே, மாதாந்தம் 5000 சேவல் கோழிக்குஞ்சுகளை பன்றிகளுக்கு உணவாகக் கொடுப்பது, கோழிப்பண்ணை நிர்வாகத்திற்கு இறைச்சிக்காக வழங்குவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.