கயானா அரசு பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் மரணம்
#Death
#Accident
#children
#fire
Prasu
2 years ago
தென்அமெரிக்க நாடான கயானாவின் தென்மேற்குப் பகுதியில் ஒரு அரசுப் பள்ளி விடுதி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி விடுதியில் ஆண்கள், பெண்கள் என 30க்கும் அதிகமானோர் தங்கியிருந்தனர்.
இரவு பள்ளி விடுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 19 குழந்தைகள் உயிரிழந்தனர்.
சிறுமிகள் பலர் பாயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இந்த தீ விபத்து பற்றி அந்த நாட்டின் அதிபர் இர்பான் அலி கூறியதாவது: இந்த விபத்து ஒரு பயங்கரமானது என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து ஏற்பட்டதற்குக் காரணம் என்னவென்று போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.