பூட்டிய வீடுகளுக்குள் திருடும் பகல் திருடனைக் கைது செய்த பொலிஸார்
மூடிய வீடுகளுக்குள் புகுந்து சொத்துக்களை திருடும் குற்றவாளி என கூறப்படும் நபர் ஐந்து கிராம் ஹெரோயினுடன் நேற்று (22) கைது செய்யப்பட்டதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.
அதுருகிரிய பிரதேசத்தை சேர்ந்த (39) வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாவ பரண வீதியிலுள்ள வைத்தியர் ஒருவரின் வீடு மற்றும் பன்னிபிட்டிய வைத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்ட இரண்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அண்மையில் முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
இதன்படி, சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட ஒருவரை விசாரணை செய்த போது, அவர் தினமும் கொட்டாவ பிரதான பஸ் நிலையத்திற்கு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குழுவொன்று அங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில் பல திருட்டுகளின் மூலத்தை கண்டுபிடிக்க முடிந்தது.
இதன்படி சந்தேகநபரிடம் இருந்து கிடைத்த தகவலுக்கு அமைய அவரது வீட்டில் தொலைக்காட்சி, ஜெனரேட்டர், எரிவாயு சிலிண்டர் மற்றும் 05 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாகி கொட்டாவ, அதுருகிரிய, மஹரகம மாலம்பே ஆகிய பகுதிகளில் வீடுகளை உடைத்து சொத்துக்களை கொள்ளையடித்து வந்தவர் என தெரியவந்துள்ளது.
கொட்டாவ பொலிஸ் பிரிவில் சொத்துக்களை அபகரித்தமை தொடர்பான பல வழக்குகளில் குற்றவாளியாக காணப்பட்ட பின்னர், பதிவுசெய்யப்பட்ட குற்றவாளியாக அவர் பெயரிடப்பட்டார்.