குழந்தையை பாடசாலையில் இறக்கிவிட்டுச் சென்ற பெற்றோர் மீது துப்பாக்கிச் சூடு: தந்தைபலி! தாய் படுகாயம்

#SriLanka #Death #Police #Crime #Lanka4 #GunShoot #sri lanka tamil news
Prathees
2 years ago
குழந்தையை பாடசாலையில்  இறக்கிவிட்டுச் சென்ற பெற்றோர் மீது துப்பாக்கிச் சூடு: தந்தைபலி! தாய் படுகாயம்

காலி ஹபராதுவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 ஹபராதுவ ஹினட்டிகல பிரதேசத்தில் இன்று (24) தனது குழந்தையை பாடசாலைக்கு விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தம்பதியினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்து காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 ஹெங்கேதரவத்தை, தல்பே பகுதியைச் சேர்ந்த விக்கிரமசேனாரத் யாபகே லக்ஷித நுவன் குமார (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார்.

 குழந்தை பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் முச்சக்கரவண்டிக்கு பின்னால் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

 கைத்துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உயிரிழந்தவரின் உடலில் 10 தோட்டாக்கள் தாக்கியதாகவும், அவரது மனைவி கழுத்தில் சுடப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!