தையிட்டியில் கைதானவர்கள் விடுதலை: ஜனநாயக போராட்டங்களை தடுக்க முடியாதென உத்தரவு: மீண்டும் போராட்டம்

#SriLanka #Protest
Mayoorikka
2 years ago
தையிட்டியில் கைதானவர்கள் விடுதலை: ஜனநாயக போராட்டங்களை தடுக்க முடியாதென உத்தரவு:  மீண்டும் போராட்டம்

தையிட்டியில் பொதுமக்களின் காணிக்குள் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை அகற்றக் கோரி மீண்டும் போராட்டம் ஒன்று இன்று முன்னதேனுக்கபப்டு வருகின்றது.

 நேற்று தினம் தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 9 பேரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட போது, போராட்டம் நடத்த நீதிமன்றம் தடைவிதித்ததாக தெரிவித்து, பொலிஸார், போராட்டக்காரர்களை கைது செய்ததோடு பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனை பலவந்தமாக தூக்கிச் சென்றனர். கைதானவர்கள் சார்பில் 15 சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

 இந்நிலையில், நேற்று கைது செய்யப்பட்ட 9 பேரையும் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போது கைதானவர்களை விளக்கமறியலில் வைக்க பொலிஸார் கோரிய போதும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் அதை எதிர்த்தனர்.

 இன்று 2.30 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, கைதானவர்களை பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் ஜனநாயகரீதியிலான போராட்டங்களை தடுக்க முடியாதென்றும் உத்தரவிட்டது. இதேவேளை விடுதலையானவர்கள் மீண்டும் தையியிடில் தற்பொழுது போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

images/content-image/1684940329.jpg

images/content-image/1684940315.jpg

images/content-image/1684940298.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!