யாழ். பல்கலைக்கழகத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் திறப்பு!

#SriLanka #University
Mayoorikka
2 years ago
யாழ். பல்கலைக்கழகத்தில்  தொல்லியல் அருங்காட்சியகம் திறப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி.கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகம் இன்று புதன்கிழமை(24) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 வரலாற்றுத் துறைத் தலைவர் திருமதி சாந்தினி அருளானந்தம் தலைமையில் இன்று காலை காலை 11 மணியளவில், கைலாசபதி கலையரங்கத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சி.சிறீசற்குணராஜா, அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்து, அருங்காட்சியகத்துக்கான மெய்யுரு நிகழ்நிலை இணையத் தளத்தையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

 திறப்பு விழாவுக்கு முன்னதாக கைலாசபதி கலையரங்கத்தில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் முன்னாள் தலைவரும், ஓய்வு நிலை சிரேஷ்ட பேராசிரியருமான பரமு புஷ்பரட்ணம் கலாநிதி இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகம் பற்றிய அறிமுகவுரையை ஆற்றினார். 

தொடர்ந்து கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் மற்றும் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந் நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.மௌனகுரு, மத்திய கலாச்சார நிதியம், தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள், யாழ். பல்கலைக்கழகத்தின் பதிவாளர், நிதியாளர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் முதலாவது தலைவர் கலாநிதி கா.இந்திரபாலாவின் கருத்துருவாக்கத்தில் அடித்தளமிடப்பட்ட இத் தொல்லியல் அருங்காட்சியகம், யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் முன்னாள் தலைவரும், ஓய்வு நிலை சிரேஷ்ட பேராசிரியருமான பரமு புஷ்பரட்ணத்தின் முயற்சியினால் அமெரிக்கத் தூதரகம், மத்திய கலாசார நிதியம் ஆகியவற்றின் அனுசரணையில் கலாநிதி.கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகமாக உருப்பெற்றுத் திறப்பு விழா காண்கின்றதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

images/content-image/1684925322.jpg

images/content-image/1684925303.jpg

images/content-image/1684925285.jpg

images/content-image/1684925271.jpg

images/content-image/1684925248.jpg

images/content-image/1684925230.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!