சித்தியடையாத ஆசிரிய பயிலுனர்களுக்கு மீண்டும் பரீட்சையில் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க முடிவு

#SriLanka #Susil Premajayantha #Lanka4 #Ministry of Education #education #Examination
Kanimoli
2 years ago
சித்தியடையாத ஆசிரிய பயிலுனர்களுக்கு மீண்டும் பரீட்சையில் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க முடிவு

தேசிய கல்வியற் கல்லூரிகளில் ஆசிரிய நியமனத்திற்காக, நடத்தப்பட்ட பரீட்சைகளில் சித்தியடையாத ஆசிரிய பயிலுனர்களுக்கு மீண்டும் குறித்த பரீட்சையில் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 தேசிய கல்வியல் கல்லூரிகளில் பயிற்சியினை நிறைவு செய்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சித்தியடையாமல் இருப்பதால், அவர்கள் மீண்டும் தோற்றுவதற்கு இன்னும் ஒருவருடம் செல்லும் நிலை இருப்பதாக இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேலுகுமார் சுட்டிக்காட்டினார். அதற்கான ஏதேனும் வேலைத்திட்டம் உள்ளதா? என, அவர் கல்வி அமைச்சரிடம் வினவியுள்ளார்.

 இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, தேசிய கல்வியற் கல்லூரியில் 7,800 பேர் பயிற்சியை நிறைவு செய்து நியமனத்தை எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர்களில் 350 பேர் குறித்த பரீட்சையில் சித்தியடையாதுள்ளனர்.

 எனவே, முதல் கட்டமாக 7500 பேருக்கு நியமனத்தை வழங்கியதன் பின்னர், எஞ்சிய 350 பேருக்கும் மீளவும் அந்த பரீட்சைக்கு தோற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த பரீட்சையை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!