இராணுவ அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்திய முன்னாள் சிப்பாய் கைது
#SriLanka
#Arrest
#drugs
#Military
#Smuggling
Prasu
2 years ago
முல்லேரிய பிரதேசத்தில் இராணுவ அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருட்களுடன் 1,850 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் தொடர்பில் கிடைத்த தகவலின்படி, முல்லேரியா வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கொண்டு சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.