ஜனக்க ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

#SriLanka #Parliament #Wimal Weerawansa #Lanka4 #srilankan politics
Kanimoli
2 years ago
ஜனக்க ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை   விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

ஜனக்க ரத்நாயக்கவை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பிலான பிரேரணை பாராளுமன்றத்தில் நாளை(24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. உண்மையான மக்கள் பிரதிநிதிகள் தனக்கு ஆதரவாக நாளை செயற்படுவார்கள் என நம்புவதாக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜனக்க ரத்நாயக்க கூறினார்.

 பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிரான பிரேரணைக்கு ஆளுங்கட்சியில் பெரும்பான்மையாகவுள்ள பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்கும் என முன்னாள் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

 பிரேரணைக்கு எதிராக தாம் வாக்களிக்கப்போவதாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளுடன் பொது எதிரணியாக செயற்படும் சுதந்திர மக்கள் கூட்டணியும் பிரேரணைக்கு எதிராக தாம் வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி மேலவை இலங்கை கூட்டமைப்பாக செயற்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தரப்பினரும் இந்த பிரேரணைக்கு இணங்கப்போவதில்லை என இன்று அறிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!