கொலைச்சம்பவம் : 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆறு பேருக்கு மரண தண்டனை
20 வருடங்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை, கட்டன்வெவ பகுதியில் சிங்கள புத்தாண்டு தினத்தன்று நபர் ஒருவரை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் தண்டனை விதித்தது.
இவ்வாறு ஹம்பாந்தோட்டை கொன்னொருவ மற்றும் கட்டன்வெவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சமன் புலத்கம என்ற 81 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை சினிபல்லைச் சேர்ந்த லலித் பிரசன்ன, 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை, 80 வயதான ரணசிங்க ஆராச்சியின் ஜினதாச, 46 வயதான ஹேவா ஹல்பகே வசந்த, 39 வயதான திலான் மஞ்சுள மற்றும் 38 வயதான எச்.எம்.நவரத்ன ஆகிய 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அனைத்து சாட்சியங்களையும் பரிசீலித்த ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 15 பேரை விடுதலை செய்தார்.
06 குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.
இதன்படி, குறித்த குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஆறு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், மரண தண்டனை விதிக்கப்படும் வரை குற்றவாளிகளை வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு அகுனுகொலபலஸ்ஸ சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.