பலாப்பழத்தால் வந்த வினை: பேக்கரி உரிமையாளர் உயிரிழப்பு

#SriLanka #Murder #Crime #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
பலாப்பழத்தால் வந்த வினை: பேக்கரி உரிமையாளர் உயிரிழப்பு

கல்கிஸ்ஸ, ரத்மலானை பிரதேசத்தில் பேக்கரி உரிமையாளரை கத்தியால் குத்திய கொலையாளியை கண்டுபிடிக்கஇ கல்கிஸ்ஸ தலைமையக பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஹபுகஸ்தலாவ, அஹஸ்வெவ வீதியைச் சேர்ந்த மொஹமட் பாயிஸ் என்ற 29 வயதுடைய பேக்கரி உரிமையாளரே உயிரிழந்துள்ளார்.

 கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான பேக்கரி உரிமையாளர் கொழும்பு களுபோவில தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 ஹோட்டல் உரிமையாளர் சந்தேக நபரிடம் பலாப்பழம் கொண்டு வருமாறு கூறியுள்ளார். அதன் சந்தேக நபர் பிரகாரம் பலாப்பழம் ஒன்றை கொண்டு வந்துள்ளார்,

 பேக்கரி உரிமையாளரிடம் 250 ரூபாவை செலுத்துமாறும் கூறியுள்ளார். அங்கு, பேக்கரி உரிமையாளர், பலாப்பழத்தை, 200 ரூபாய்க்கு தரும்படி கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

 அதன் பின்னர, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ​​பேக்கரி உரிமையாளர், பேக்கரிக்குள் சென்று கத்தியை எடுத்து வந்தார்.

 அப்போது, ​​கத்தியை பறித்து சந்தேகநபர், அதன் மூலம் பேக்கரி உரிமையாளரை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 கல்கிஸ்ஸ தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் திலிப பெரேராவின் பணிப்புரையின் பேரில் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!