இலங்கையின் பொருளாதார சூழல் சவாலானதாக உள்ளது! சர்வதேச நாணய நிதியம்

#SriLanka #IMF #economy #money
Mayoorikka
2 years ago
இலங்கையின் பொருளாதார சூழல் சவாலானதாக உள்ளது! சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் ஒட்டுமொத்த மேக்ரோ பொருளாதாரம் மற்றும் கொள்கைச் சூழல் சவாலானதாக உள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்து அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் நாணய நிதிய ஆதரவு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி குறித்த குழு கலந்துரையாடியது.

 கலந்துரையாடல்களின் முடிவில் குழு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதுடன், உதவித் திட்டத்தின் கீழ் முக்கிய கடமைகளை நிறைவேற்றுவதில் அதிகாரிகளின் தொடர்ச்சியான முயற்சிகளை வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், மாற்று விகிதத்தை நிலைப்படுத்துதல் மற்றும் மத்திய வங்கியின் இருப்பு இடையகங்களை மீண்டும் உருவாக்குதல் ஆகிய வலுவான கொள்கை முயற்சிகளுக்குப் பின்னர், இலங்கையின் பொருளாதார நிலைமை முன்னேற்றத்திற்கான தற்காலிக அறிகுறிகளைக் காட்டுவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!