59 வயதில் அடுத்த திருமணத்திற்கு தயாராகும் அமேசான் நிறுவனர் பெசோஸ்
#Amazon
#wedding
#Old
Prasu
2 years ago
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரின் தோழி லாரென் சன்செஸ் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது இந்த தம்பதி ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரென் சன்செஸ் இடையே திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்த நிலையில், சன்செஸ் கையில் இதய வடிவம் (ஹார்டின்) மோதிரம் இருப்பதை தொடர்ந்து, இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.