பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நீதிமன்றில் ஆஜரானார்.

#SriLanka #Lanka4 #Social Media #srilankan politics
Kanimoli
2 years ago
பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நீதிமன்றில் ஆஜரானார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து அங்கு அசாதரண நிலைமைகளை தோற்றுவித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான முறைப்பாட்டை எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 குறித்த முறைப்பாடு இன்று(23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நீதிமன்றில் ஆஜரானார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். அதன்படி, நவம்பர் 7 ஆம் திகதி மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையின் முன்னேற்றத்தை அன்றைய தினம் நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் உத்தரவிட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!