சிரிய ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்த வேண்டும்...
சிரியாவின் சிவில் யுத்தத்தின்போது இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் கெத்தரின் கொலோனா கூறியுள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, ஜனாதிபதி அஸாத்துக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டுமா என அமைச்சர் கெத்தரின் கொலோனாவிடம் கேட்கப்பட்டது.
அப்போது அமைச்சர் கெத்தரின் கொலோனா பதிலளிக்கையில், ஆம், குற்றங்கள் மற்றும் தண்டனை விலக்களிப்புக்கு எதிரான போராட்டமானது பிரெஞ்சு இராஜதந்திரத்தின் ஒரு பகுதியாகும் எனக் கூறியுள்ளார்.
கடந்தவாரம் சவூதி அரேபியாவில் நடைபெற்ற அரபு லீக் உச்சிமாநாட்டில் சிரிய ஜனாதிபதி அல் அஸாத் பங்குபற்றினார்.
10 வருடங்களுக்கு மேலாக இவ்வமைப்பிலிருந்து அல் அஸாத் விலக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், அவருக்கு எதிரான கொள்கையிலிருந்து பிரான்ஸின் நிலைப்பாடு மாறவில்லை என அமைச்சர் கொலோனா கூறியுள்ளார்.