சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் தொடர்பில் மீளாய்வு!

#SriLanka #IMF #money
Mayoorikka
2 years ago
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் தொடர்பில் மீளாய்வு!

இலங்கை வந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று தமது விஜயத்தினை நிறைவு செய்துள்ளது.

 சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

 கடந்த 11 ஆம் திகதி இலங்கை வந்திருந்த பீட்டர் ப்ரூவர் மற்றும் மசஹிரோ நொசாகி தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (மே 23) தனது விஜயத்தை நிறைவு செய்துள்ளது.

 சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது மற்றும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் அவர்கள் இந்நாட்டில் கருத்துகளை பரிமாறிக்கொண்டுள்ளனர். 

 இலங்கைப் பொருளாதாரத்தில் சில சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் கொள்கைச் சூழல் சவாலானதாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!