இம்மாதம் கல்விப் பொது தராதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடையே மோதல் - மூவர் கைது

#SriLanka #Arrest #School Student #Fight
Prasu
2 years ago
இம்மாதம் கல்விப் பொது தராதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடையே மோதல் - மூவர் கைது

இம்முறை கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கணித கருத்தரங்கில் கலந்து கொண்ட பண்டாரவளை நகரில் உள்ள இரண்டு பாடசாலைகளின் இரு மாணவர்களை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பண்டாரவளை நகரில் உள்ள மற்றொரு பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் இந்த வருடம் கல்விப் பொது தராதர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 கணிதக் கருத்தரங்கு நிறைவடைந்ததையடுத்து குறித்த இரண்டு மாணவர்களும் பண்டாரவளை நகரில் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ரயில் பாதைக்கு சென்றபோதே இவ்வாறு தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!