அமைச்சர் டக்ளஸ் அவர்களின் கோரிக்கைக்கு மண்ணெண்ணெயை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு கொழும்பில் நடைபெற்றது.

#SriLanka #Douglas Devananda #people #Lanka4 #srilankan politics
Kanimoli
2 years ago
அமைச்சர் டக்ளஸ் அவர்களின் கோரிக்கைக்கு  மண்ணெண்ணெயை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு கொழும்பில்  நடைபெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கு அமைய இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு சீனா அரசாங்கத்தின் உதவியாக கிடைக்கப்பெற்றுள்ள மண்ணெண்ணெயை பயனாளிகளுக்கு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று கொழும்பு பாணந்துறை மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது.

 சீனாவின் உதவியோடு கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்து அங்கு உரையாற்றிய கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இலங்கையில் நாளாந்தம் கடற்றொழிலுக்கு சென்று வரும் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு சுமார் 5000 ரூபாய் வரை மண்ணெண்ணைக்கு செலவு செய்து கடற்றொழிலுக்குச் சென்று வீடு திரும்புகின்றனர் எனவும் அவர்களுக்கு எல்லா நாளும் போதுமான வருமானம் கிடைப்பதில்லை. அத்தகைய நிலையில் அவர்களுக்கு ஏதோவொரு வகையில் உதவ வேண்டும் என்று பல தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றோம்.

 அவ்வாறான முயற்சி மற்றும் கோரிக்கைக்கு கிடைத்த பலனாகவே சீனா அரசு வறுமையில் வாடும் எமது கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், வீட்டு வசதி மற்றும் அரசி போன்ற உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளது. அதற்காக சீன அரசுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்தவகையில் சுமார் 27,000 கடற்றொழிலாளர்களுக்கு தலா 150 லீற்றர் அளவில் வழங்குவதற்கு சீனா அரசு உதவி செய்ய முன் வந்துள்ளது.

 ஒருவருக்கு 150 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கும் நிகழ்வு இன்று பாணந்துறையில் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. கடற்றொழில் மாவட்டங்களான 15 மாவட்டங்களில் இருக்கும் ஒருநாள் படகு பாவனையாளர்களுக்கு இந்த மண்ணெண்ணெய் விரைவில் கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!