தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை ஜூலை முதல் அதிகரிக்க தீர்மானம்

#SriLanka
Prabha Praneetha
2 years ago
தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை ஜூலை  முதல் அதிகரிக்க  தீர்மானம்

தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை அடுத்த இரண்டு மாதங்களில் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 குறித்த விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 அதன்படி, உள்ளூர் பெரியவர்களுக்கு 200 ரூபாவும், சிறுவர்களுக்கான நுழைவுக் கட்டணமாக 30 ரூபாவும், வசூலிக்கப்படுகிறது. முன்பு பெரியவர்களுக்கு 100 ரூபாவும், சிறுவர்களுக்கு 20 ரூபாவும் கட்டணம் விதிக்கப்பட்டது.

 தாவரவியல் பூங்காவிற்கு வெளிநாட்டு பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் 3,000 ரூபாவாகவும் வெளிநாட்டு சிறுவர்களுக்கு 1,500 ரூபாவாகவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!