தையிட்டியில் பொலிஸாரின் வெறித்தனம்: இருவர் கைது! கஜேந்திரன் உட்பட பலர் மீதும் தாக்குதல் (இரண்டாம் இணைப்பு )
தையிட்டியில் பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை அகற்ற கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையில் சற்றுமுன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட,உறுப்பினர்களான சுதாகரன் கோபி வாசுகி சுதாகரன் மீது தாக்குதலும் பொலிஸாரால் மேற்கொள்ளபப்ட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த விகாரையை அகற்றக்கோரி நேற்று இரவு முதல் மீண்டும் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஊடக பேச்சாளர் சுகாஷ் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஆதரவாளர்கள் என பலர் ஈடுபட்டிருந்தனர்.
(இரண்டாம் இணைப்பு )
தையிட்டி விகாரையினை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி சுகாஷ் மற்றும் தமிழ்மதி ஆகியோர்பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்,
