பாராளுமன்றத்திற்குள் நுழைந்த குஷானி அனுஷா: சபாநாயகர் இன்று விடுத்த விசேட அறிவிப்பு

#SriLanka #Parliament #speaker
Mayoorikka
2 years ago
பாராளுமன்றத்திற்குள் நுழைந்த குஷானி அனுஷா: சபாநாயகர் இன்று விடுத்த விசேட அறிவிப்பு

பாராளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகமாக பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமும் தலைமை அதிகாரியுமான குஷானி அனுஷா ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (23) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

 சபாநாயகர் இதனை அறிவித்ததும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 சபாநாயகருடன் ரோஹணதீர இன்று பிரதான நுழைவாயில் ஊடாக சபைக்குள் பிரவேசித்தார்.

 முன்னாள் பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க, தான் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்து அனுப்பிய கடிதத்தையும் சபாநாயகர் வாசித்தார்.

 பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் ஆற்றிய சேவையை சபாநாயகர் பாராட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!