கரையோர பிரதேச மக்களின் இடர்முகாமைத்துவம்: யாழில் கலந்துரையாடல்

#SriLanka #Jaffna #Meeting
Mayoorikka
2 years ago
கரையோர பிரதேச மக்களின் இடர்முகாமைத்துவம்: யாழில் கலந்துரையாடல்

கரையோர பிரதேசம் வாழ் மக்களின் இடர்முகாமைத்துவம் மற்றும் விழிப்புணர்வுச் செயற்பாடுகளை விரிவாக்குதல் போன்ற பல செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல் ஒன்று யாழில் இடம்பெற்றது.

 ஆசிய பசுபிக் பிராந்திய அனர்த்தமுகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுவின் (APAD) ஏற்பாட்டில்; இன்று காலை 10:00 மணிதொடக்கம் 11.30 மணிவரை கே.கே.எஸ் வீதயில் அமைந்துள்ள தனியார் விடுதி மண்டபத்தில் அரச, அரசார்பற்ற, தனியார் மற்றும் பொது அமைப்புகளை ஒன்றினைத்து குறித்த கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.

 குறித்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களாக:

 • கரையோர பிரதேசம் வாழ் மக்களின் இடர்முகாமைத்துவம் மற்றும் விழிப்புணர்வுச் செயற்பாடுகளை விரிவாக்குதல்

 • பாடசாலை மாணவர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ அடிப்படை அறிவுநிலைகளை வலுப்படுத்தி பயிற்சிகளை வழங்குதல்

 • அரச, தனியார் மற்றும் பொது அமைப்புகளின் காத்திரமான, இணைந்த செயற்பாடுகளை வலுப்படுத்தி நீடித்த நிலைப்பாட்டை உருவாக்குதல்

 போன்ற மிகப் பயனுள்ள விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடுதோடு அதில் பங்குகொண்ட பங்குபற்றுனர்கள் தங்கள் சார்பாக பல பெறுமதிமிக்க ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்கள். 

அத்தோடு நீடித்து நிலைக்கக்கூடிய தொடர் செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய காத்திரமான வலைப்பின்னல் ஓன்றும் வருகைதந்திருந்தவர்களின் ஆலோசனைகளுக்கமைய இன்றையதினம் குழுவொன்று உருவாக்கப்பட்டமையும் முக்கிய விடயமாக அமைந்திருந்தது.

 கலந்துரையாடல்களில் தீர்மானிக்கப்படுகின்ற முக்கியமான விடயங்களும் தீர்மானங்களும் அறிக்கைகள் மூலமாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சிற்கு நேரடியாக அனுப்பிவைக்கப்படுவதோடு பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 மேற்படி நிகழ்வை ஆசிய பசுபிக் பிராந்திய அனர்த்தமுகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுவின் (APAD) யாழ் மாவட்ட அலுவலர் கலீஸ் தலைமை தாங்கி நடாத்தியிருந்தார். 

அத்துடன் அவர்களது கொழும்பிலுள்ள தலைமையகத்திலிருந்தும் சில பணியாளர்கள் வருகைதந்து கலந்துகொண்டிருந்தார்கள்.

images/content-image/1684770824.jpg

images/content-image/1684770807.jpg

images/content-image/1684770791.jpg

images/content-image/1684770776.jpg

images/content-image/1684770761.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!