தையிட்டி விகாரையை அகற்றக்கோரி மீண்டும் போராட்டம்!
#SriLanka
#Jaffna
#NorthernProvince
#Protest
Mayoorikka
2 years ago
தையிட்டியில் பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை அகற்ற கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாட்டில் இன்றைய தினம் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகி இடம் பெற்று வருகின்றது.
குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஊடக பேச்சாளர் சுகாஷ் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஆதரவாளர்கள் என பலர் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை அண்மையில் குறித்த விகாரையை அகற்றக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.