டொலருக்கு எதிராக இலங்கையின் ரூபா மேலும் அதிகரிப்பு!

#SriLanka #Bank #Central Bank #money
Mayoorikka
2 years ago
டொலருக்கு எதிராக இலங்கையின் ரூபா மேலும் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு எதிராகஇலங்கையின் ரூபா மேலும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

 மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் முறையே 297.32 ரூபா மற்றும் 314.29 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை கடந்த வெள்ளிக்கிழமை 299.66 ரூபாவாக பதிவாகி இருந்ததுடன் இன்று 298.90 ரூபாவாக குறைவடைந்துள்ளது. இதேவேளை விற்பனை விலையானது மாறாமல் 312 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 மேலும் சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் முறையே 300 ரூபா மற்றும் 312 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

images/content-image/1684753368.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!